கடந்த சில நாட்களாக வாரணாசியில் உள்ள கியான்வாபி மசூதியில் சிவலிங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி வருகின்றன. இதுகுறித்து நீதிமன்றமும் விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், டெல்லி பல்கலைக்கழக இணை பேராசிரியர் ரத்தன் லால் என்பவர் கியான்வாபி மசூதி – சிவலிங்கம் குறித்து சர்ச்சைக் குரிய கருத்தை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாக வழக்கறிஞர் வினீத் ஜிண்டால் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதில், லால் “சிவலிங்கத்தின் மீது இழிவான, தூண்டுதல் மற்றும் ஆத்திரமூட்டும் டிவீட்டை” பகிர்ந்துள்ளார். அவரது கருத்து “ஆத்திரமூட்டும் வகையில் உள்ளது” இதனால் பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளது. மதத்தின் அடிப்படையில் இருவேறு குழுக்களுக்கு இடையே விரோதத்தை ஊக்குவிக்கும் உள்ளதாகவும், அதனால், இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகள் 153A, 295A ஆகியனவற்றின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.
இந்த புகார் மனுவை பதிவு செய்து, வழக்குப்பதிவு செய்து போலீஸார் லாலை கைது செய்தனர். அவர் மீது எஃப்ஐஆரும் பதிவு செய்யப்பட்டுள்ளது.