காவி மயம்… திராவிட மாடல்… :சர்ச்சை கிளப்பும் மோடி, பெரியார் போஸ்டர்கள்

Pi7_Image_IMG_20220917_112103_1-Copy.jpg

THE KOVAI HERALD

‘பாரதத்தந்தை மோடிஜி 72வது பிறந்தநாள் சூளுரை: ஊழல் பேர்வழிகளை வேரறுத்து தமிழகத்ததை காவி மயமாக்குவோம்- இவண் பாரதிய ஜனதாகட்சி’ என்று ஒரு போஸ்டர்.

‘தந்தை பெரியார் 144வது பிறந்தநாள் சூளுரை; சனாதனத்தை வேரறுத்து இந்தியாவை திராவிட மாடலாக்குவோம்- தந்தை பெரியார் திராவிடர் கழகம்’ என்று இன்னொரு போஸ்டர். இப்படி இருவேறு போஸ்டர்கள் கோவை நகரத்து வீதிகளில் அங்கங்கே ஒட்டப்பட்டு சர்ச்சை கிளம்பிக் கொண்டிருக்கிறது.

கோவையில் போஸ்டர்கள் ஒட்டுவது தடை செய்யப்பட்டுள்ளது. அதையும் மீறி போஸ்டர்கள் ஒட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் படுகிறது.

ஆனால் ஆளும்கட்சியின் அரசியல் போஸ்டர்கள், முதல்வர் வரவேற்பு போன்றவை பற்றி போஸ்டர்கள், சுவர் விளம்பரங்கள் தொடர்ந்து நகரத்து வீதிகளில் கடை பரப்பப்படுகிறது. அதற்கு அனுமதிக்காதவர்கள், வழக்குப் போடுபவர்கள் இதை மட்டும் எப்படி கண்டும் காணாமல் இருக்கிறார்கள் என்று மற்ற கட்சியினர் சர்ச்சை கிளப்புவதும் அடிக்கடி நடக்கிறது.

1997- ஆம் ஆண்டில் போலீஸ்காரர் செல்வராஜ் படுகொலை, அதன் பின்னணியில் நடந்த கலவரம், அதற்கு ஊடே வந்த டிசம்பர்-6 அன்று நடந்த ரயில் குண்டு வெடிப்புகள், அதற்குப் பின்பு 1998- பிப்ரவரியில் 14-ல் நடந்த தொடர் குண்டு வெடிப்புகள் பின்னாலும் போஸ்டர்களே இருந்தன. மதவாத இரண்டு அமைப்புகள் மாறி மாறி எதிர்ப்பு நாள், துக்க நாள் என்று குறிப்பிட்டு போஸ்டர்களும், சுவர் விளம்பரங்களும் வைக்கவே அந்த விவகாரம் விஸ்வரூபமெடுத்தது. ஃ

அந்த மோசமான சம்பவங்களுக்குப் பிறகு கோவை போலீஸார் எந்த ஒரு போஸ்டர், சுவர் விளம்பரம் செய்ய வேண்டுமானாலும் காவல்துறை அனுமதி வாங்க வேண்டும் என்று அறிவித்தனர். தொடர்ந்து 10 வருடங்களுக்கு மேலாக 144 தடை உத்தரவும் கோவையில் அமல்படுத்தப்பட்டு வந்தது நாட்டிலேயே தொடர்ந்து இப்படி ஆண்டுக்கணக்கில் 144 தடை உத்திரவு போடப்பட்டிருப்பது கோவையில் மட்டும்தான் என்றும் அதையொட்டிய சர்ச்சைகளும் எழுந்தன.

கோவையின் நிலைமை இப்படியிருக்க கடந்த சில நாட்களாக பெரியார் பிறந்தநாளுக்கும், நரேந்திர மோடி பிறந்தநாளுக்கும் முறையே திகவினரும், பாஜகவினரும் மாறி மாறி போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர். அதில் ஒரு போஸ்டர் தமிழகம் காவி மயமாகட்டும் என்றும், இன்னொன்றில் தமிழகம் திராவிட மயமாகட்டும் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

S.KAMALA KANNAN Ph. 9244319559

scroll to top