காளப்பட்டி ரோட்டில் சந்திரமாரி சர்வதேச பள்ளி துவக்க விழா

WhatsApp-Image-2023-04-22-at-1.40.53-PM.jpeg

துபாய் நாட்டில் கட்டிட கலை வல்லுனராக செயல்பட்டு வந்த முரளி குமார் தனது தாயாரின் ஆசிரியர் பணியிடத்தை மேன்மைப்படுத்தவும் நவீன கல்வியை சாதாரண மக்களுக்கு கிடைக்கச் செய்யும் நோக்கில் சந்திரமாரி என்ற பள்ளியை கோவை காளப்பட்டி பகுதியில் துவக்கவுள்ளார். 
கோவை காளப்பட்டி ரோட்டில் சந்திரமாரி சர்வதேச பள்ளி துவக்க விழா குறித்து தலைவர் முரளி குமார், தாளாளர் சுமதி முரளி குமார், முதல்வர் டாக்டர் பிரேமா முரளிதரன், நிர்வாக அறங்காவலர் சுரேஷ்பாபு, கலைவாணி, தனுஷ்கோடி.தலைமை செயல் இயக்குனர் டாக்டர் விஜய் சந்துரு.ஆகியோர் பங்கேற்று பேசினார்.

சுமார் மூன்றரை ஏக்கர் பரப்பளவில் எல்கேஜி முதல் எட்டாம் வகுப்பு வரை முதற்கட்டமாக சர்வதேச தர கல்வியை கோவை நகர மக்களுக்கு அர்பணிக்க உள்ளதாக பள்ளியின் தலைவர் முரளி குமார் தெரிவித்தார். பள்ளிப்படிப்பை பாட புத்தகங்களோடு பல அறிவியல் விஷயங்களையும் புகட்டி அனுபவ பாடங்களையும் தகுதிமிக்க ஆசிரியர்களை கொண்டு பயிற்றுவிக்கவும் சர்வதேச போட்டிகளில் மாணவர்களை பங்கேற்க தயார் செய்வதற்கும் நாங்கள் எங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளோம்.கோவை நகரை தாண்டி வெளிநாட்டு மாணவர்களை கோவையை நோக்கி பார்க்கச் செய்ய படிக்கச் செய்ய பல்வேறு முயற்சிகளில் செயல்பட உள்ளோம் என்று தெரிவித்தார்.

scroll to top