காரில் சிலிண்டர் வெடித்து ஒருவர் பலி

Pi7_Image_WhatsAppImage2022-10-23at10.29.29-e1666505810357.jpeg

கோவை உக்கடம் கோட்டைமேடு பகுதியில் இன்று அதிகாலை சென்று கொண்டிருந்த மாருதி காரில் திடீரென கேஸ் சிலிண்டர் வெடித்து காரில் பயணம் செய்தவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தொடர்ந்து தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து ஏற்பட்ட பகுதியில் நான்கு புறமும் சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு தடுப்பு வேலிகள் அமைத்துள்ள போலீசார் விபத்து குறித்த விசாரணை மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளன

scroll to top