விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி செவல்பட்டி அருகே, உள்ள ஸ்ரீ கபால காளியம்மன் கோவில் வருஷாபிஷேகம் நடைபெற்றது. வருஷாபிஷேகத்தை முன்னிட்டு, விக்னேஸ்வர பூஜை, மஹா சங்கல்பம், புண்யாகாவாஷணம், கலச பூஜை, ஜபம்,பிரத்தியங்கிரா ஹோமம், கோ பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மஹாலெட்சுமி ஹோமம், ஆகிய சிறப்பு யாகங்கள் நடைபெற்றது.
இன்று காலை 9 மணி யளவில் காரியாபட்டி சுப்பிரமணியர் கோவிலிருந்து மேளதாளங்கள் முழங்க ஆயிரக்கணக்கான பெண் பக்தர்கள் அக்னிசட்டி மற்றும் பால்குடம் ஏந்தி ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். அதன்பிறகு, அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. பக்தர்களுக்கு,
அன்னதானம் வழங்கப்பட்டது .இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.