காரியாபட்டி வட்டாரத்தில் சேதமடைந்த கண்மாய்களை அதிகாரிகள் ஆய்வு

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில், கடந்த சில நாட்களாக பெய்துவரும் தொடர் மழையினால் கண்மாய்கள், குளங்கள் ஊரணிகள் நிரம்பியது.
சில இடங்களில் கண்மாய்கரைகளில் வெடிப்பு ஏற்பட்டு மண்சரிவு காரணமாக நிரம்பிய தண்ணீர் வினாக வெளியேறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும், வட்டாட்சியர் தனக்குமார், ஊராட்சி ஒன்றிய
ஆணையாளர் சிவக்குமார் மற்றும் மாவட்டக் கவுன்சிலர் தங்க தமிழ்வாணன்
மற்றும் வருவாய்துறையினர் சேதமடைந்த கண்மாய்களை பார்வையிட்டு உடனடியாக சீரமைப்பு செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

scroll to top