காரியாபட்டி, மல்லாங்கிணற்றில் ரூ.6 கோடியில் வளர்ச்சி பணி: பேரூராட்சிகளின் நிர்வாக ஆணையாளர் ஆய்வு:

Pi7compressedWhatsAppImage2022-07-17at7.16.37PM.jpeg

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி, மல்லாக்கிணறு ஆகிய பகுதிகளில், பேரூராட்சிகளின் நிர்வாக ஆணையாளர் டாக்டர்.செல்வராஜ், நேரில் சென்று அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார்.
பின், மரக்கன்றுகளை நட்டு வைத்து
வளம் மீட்பு பூங்காவில் கலவை உரம், மண்புழு உரம் தயாரிக்கப்படுவதை பார்வையிட்டார்.
காரியாபட்டி
பேரூ ராட்சியில் ,
ரூ. 3 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்த ஆணையாளர், அலுவலகத்தில் ‘எனது குப்பை எனது பொறுப்பு’ நகரங்களுக்கான தூய்மைக் கான விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார்.
மல்லாங்கிணறு பேரூராட்சிக்கு சென்ற பேரூராட்சிகளின் ஆணையாளர் ரூ.3.50 கோடி மதிப்பில் நடைபெறும் நகர்ப்புற வேலை வாய்பு திட்டம், மல்லாங்கிணறு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்று வரும் கூடுதல் கட்டிட பணிகள் மற்றும் வாறுகால், ஊரணி தூர்வாருதல் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
இதில் ,
பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் எஸ். சேதுராமன், உதவி செயற்பொறியாளர் சுரேஷ்கு மார். இளநிலை பொறியாளர் கணேசன், காரியாபட்டி பேரூராட்சித்
தலைவர் செந்தில், மல்லாங்கிணறு பேரூராட்சித் தலைவர் துளசிதாஸ், பேரூராட்சி செயல் அலுவலர் ரவிக்குமார், அன்பழகன் உட்பட கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

scroll to top