காரியாபட்டி பேரூராட்சியில் வளர்ச்சி பணிகளை இணை இயக்குநர் ஆய்வு

WhatsApp-Image-2022-04-24-at-1.00.26-PM.jpeg

காரியாபட்டி யில், வளர்ச்சிப் பணிகளை, பேரூராட்சிகளின் இணை இயக்குனர் மலையமான் திருமுடிக்காரி ஆய்வு செய்தார். விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பேரூராட்சியில் தற்போது பல்வேறு திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. பேருந்து நிலைய வணிக வளாக கடைகள் மற்றும் மதுரை தூத்துக்குடி பிரதான சாலையில் வடிகால் , நவீன எரிவாயு தகன மேடை மற்றும் குளம் மேம்படுத்துதல், பூங்கா மேம்பாடு, காரியாபட்டி சின்ன கண்மாய், திடக்கழிவு மேலாண்மை திட்டபணிகளை பேரூராட்சி இணை இயக்குநர் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். அப்போது, பேரூராட்சிகளின்| உதவி இயக்குனர் சேதுராமன், காரியாபட்டி பேரூராட்சித்
தலைவர் செந்தில், உதவி செயற்பொறியாளர் சுரேஷ், காரியாபட்டி செயல்அலுவலர் ரவிக்குமார் பேரூராட்சி துணைத்தலைவர் சந்தோஷம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

scroll to top