காரியாபட்டி ஒன்றியத்தில் ம.தி.முக சார்பாக கொடி ஏற்று விழா

WhatsApp-Image-2023-05-08-at-12.17.13.jpg

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஒன்றியம் முடுக்கன்குளம், நாங்கூர் கிராமத்தில் ‘ம’தி.மு.க சார்பாக கொடி ஏற்று விழா நடைபெற்றது. விழாவுக்கு, ஒன்றியச்செயலாளர் முனியாண்டி தலைமை வகித்தார். காரியாபட்டி நகரச் செயலாளர் மிசா சாமிக்கண்ணு, மாவட்ட இளைஞரணி செயலாளர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கிழக்கு மாவட்டச் செயலாளர் கண்ணன், கட்சிக்கொடி ஏற்றிவைத்து பேசினார். மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் அமிர்தராஜ், அவைத்தலைவர் மணியப்பன், பொருளாளர் தங்கவேல், ஒன்றிச் செயலாளர்கள் அருப்புக்கோட்டை சீனிவாசன், திருச்சுழி மதன், நரிக்குடி துரை கர்ணன், சாத்தூர் சேதுபதி, காரியாபட்டி அவைத் தலைவர் ராக்கப்பன், பிரதிநிதிகள் காராளம், காளிமுத்து, கோபாலகிருஷ்ணன், முத்துமாரி உட்பட பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை, ஒன்றியச்செயலாளா முனியாண்டி, இளைஞர் அணிச்செயலாளர் மார்க்கன்டேயன் ஆகியோர் செய்திருந்தனர்.

scroll to top