காரியாபட்டி ஒன்றியத்தில் வளர்ச்சிப் பணிகள் கலெகடர் ஆய்வு

காரியாபட்டியில் வளர்ச்சி பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பகுதியில், நடைபெறும் பல்வேறு வளர்ச்சி பணிகளை மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி ஆய்வு செய்தார். அப்போது, முடுக்கங்குளம் கிராமத்தில் மாற்று
திறனாளிக்காக கட்டப்பட்டு வரும் நவீன கழிப்பறை கட்டிடத்தை ஆட்சியர் மேகநாதரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார். கழிப்பறை கட்டிடம் கட்டுவதற்கு நிதி உதவி செய்த இங்கிலாந்து நாட்டை சேர்ந்த டேவிட் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்திமுத்துச்சாமி ஆகியோர், ஆட்சியர் மேகநாதரெட்டிக்கு வரவேற்பு கொடுத்தனர்.

scroll to top