காரியாபட்டி அருகே தரைப்பாலம் நீரில் மூழ்கியது- பொது மக்கள் அவதி

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே பலத்த மழை பெய்து வருகிறது. பலத்த மழையால், கால்வாய்களில் நீர் பெருக்கெடுத்துள்ளது. மேலும் கிராமங்களுக்கு இடையிலான தரைப்பாலங்கள் மேல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், காரியாபட்டி அருகே பிசிண்டி தரைப் பாலம் நீரில் மூழ்கியுள்ளதால், மாணவர்கள் பாலம் வழியாக பள்ளிக்கு செல்ல முடியாமல், அவதியடைந்துள்ளனர்.

scroll to top