காரியாபட்டி அருகே கணக்கனேந்தல் நாகம்மாள் புத்துக்கோவில் திருவிழா

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே புத்துக் கோவில் திருவிழா நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கணக்கனேந்தல் கிராமத்தில் அமைந்துள்ள நாகம்மாள் புத்துக் கோவிலில் 3-ம் ஆண்டு திருவிழா நடைபெற்றது. காலையில், செல்வ விநாயகருக்கு சிறப்பு பூஜை யுடன் விழா தொடங்கப்பட்டது.

நாகம்மாளுக்கு கண்மலர் சாத்தப்பட்டு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடத்தப்பட்டது. பக்தர்கள், பால்குடம் அலகு குத்துதல், தீச்சட்டி எடுத்து ஊர்வலமாக வந்து நேர்த்திக கடனை செலுத்தினர்.
விழாவில், அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் ,ஜெய் வராஹீ சக்தி சித்தர்பீடம் ஸ்ரீ சிவகிரி மகரிஷி சுவாமிகள் கலந்துகொண்டார்.விழா ஏற்பாடுகளை, புத்துக் கோவில் நிர்வாகக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

scroll to top