காரியாபட்டியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்

காரியாபட்டியல் பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி காவல்துறை சார்பாக பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது பள்ளி தலைமை ஆசிரியை சண்முகத்தாய் தலைமை வகித்தார் நிகழ்ச்சியில் காரியாபட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமார் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து சிறப்புரையாற்றினார் .கூட்டத்தில் பெண் குழந்தைகள் கல்வி முன்னேற்றத்திற்காக அரசு வழங்கும் நலத்திட்டங்கள் பற்றியும் பாதுகாப்புக்காக அரசு அறிவித்துள்ள சட்ட நெறிமுறைகள் குறித்தும், செல்போன் பயன்படுத்துவதில் ஏற்படும் நன்மை தீமைகள் குறித்தும் இளம் வயது திருமணத்தால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்தும் குறித்தும் மாணவிகளிடம் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டது பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சனை யிலிருந்து உடனடியாக தங்களைப் பாதுகாத்துக் கொள்ள 10 98 என்ற தொலைபேசி பயன்பாடுகள் மற்றும் காவல்துறையினரால் ஏற்படுத்தப்பட்ட பாதுகாப்பு செயலிகள் குறித்து கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டது மேலும் கொரோனா பாதிப்புக்களிலிருந்து பாதுகாக்க நோய் தடுப்பு நடவடிக்கைகளை மாணவிகள் கண்டிம்மாக பயன்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது

scroll to top