காரியாபட்டி பாரத ஸ்டேட் வங்கி, பவுண்டேசன் மற்றும் தானம் பவுண்டேசன் சார்பாக மகளிர் தின விழா நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம் தானம் பவுண்டேசன் மற்றும் காரியாபட்டி பாரத ஸ்டேட் வங்கி பவுண்டேசன் சார்பாக, மறைக்குளம் அரசு பள்ளியில் சர்வதேச மகளிர் தின விழா நடைபெற்றது. ஊராட்சி மன்றத் தலைவர் வி. தன்ராஜ், தலைமை வகித்தார் . வேப்பங்குளம் .ஊராட்சி மன்றத் தலைவர் ஆதி ஈஸ்வரன், சூரனூர் ஊராட்சி மன்றத் தலைவர் ராதிகா சிவக்குமார், ஆகியோர் முன்னிலை வகித்தனர் .
தானம் பஞ்சாயத்து வளர்ச்சி அறங்காவலர செந்தாமரை வரவேற்றார். விழாவில், சிறப்பு விருந்தினராக தானம் திட்டத் தலைவர் சாந்தி மதுரேசன் கலந்துகொண்ட முன்னோடி கிராமங்களை உருவாக்குவதில் பெண்களின் பங்கு என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள்.
நிகழ்ச்சியில், வட்டார கல்வி அலுவலர் அங்கையற்கன்னி , பாரத ஸ்டேட் வங்கி கிராம சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவன இயக்குனர் குமாரவேலு, காரியாபட்டி கிளை மேலாளர் சுரேஷ், விருதுநகர் கே.வி.கே திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் செல்வி ரமேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியை முன்னிட்டு, மாணவர்கள் சார்பாக விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில், வங்கி தத்து எடுக்கப்பட்ட கிராமங்களான தொட்டியங்குளம், தேனூர், சூரனூர் மறைக்குளம், சித்தனேந்தல் ஆகிய பகுதியிலிருந்து கிராம பெண்கள் பங்கேற்றனர்.
தானம் டிரஸ்ட் அணி தலைவர் பிரகலாதன் நன்றி கூறினார்.