காரியாபட்டியில் சமத்துவ பொங்கல் விழாக்கள் கொண்டாடப்பட்டன. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில், அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள், ஊராட்சிகள் மற்றும் பொதுநல அமைப்புகள் சார்பாக தைப்பொங்கல் விழா நடைபெற்றது. சாதி, மத வேறுபாடின்றி அனைவரும் பங்கேற்கும் சமத்துவ பொங்கல் விழா காரியாபட்டி தாலுகா அலுவலகத்தில் நடந்தது.
வட்டாட்சியர் தனக்குமார் தலைமை வகித்தார். விழாவில், கிறிஸ்தவ ஆலய பாஸ்டர்கள் ஞானப்பிரகாசம், ஜான் முஸ்தபா, சலீம் சேட், சுரபி அறக்கட்டளை நிறுவனர் விக்டர், தனி வட்டாட்சியர்கள் கருப்பசாமி, புகழேந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர். காவல்துறை சார்பாக இன்ஸ்பெக்டர் மூக்கன் தலைமையில், சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. விழாவில் சப்”. இன்ஸ்பெக்டர்கள் அசோக் குமார், பிச்சை பாண்டி, திருமலைராஜ், ஆனந்த ஜோதி கலைச்செல்வன் உட்பட பலர் பங்கேற்றனர்.. காரியாபட்டி சுரபி கல்வி அறக்கட்டளை சார்பாக, உண்டு உறைவிடப்பள்ளியில், சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது.