காந்தியின் 75-வது நினைவு நாள்: உருவப் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி

மகாத்மா காந்தியின் 75-வது நினைவு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள், மற்றும் பல்வேறு அமைப்பினர் என பலரும் காந்திக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர் .அந்த வகையில் கோவையில் பல்வேறு இடங்களில் பல்வேறு கட்சியினர் அமைப்புகள் அவர் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவை பந்தய சாலை நடைபாதையில் ஜெய் ஹிந்த் பவுண்டேஷன், கோயம்புத்தூர் லாரி உரிமையாளர்கள் சங்கம் , சகோதரத்துவ பேரவை மற்றும் யூத் பவுண்டேஷன் ஆகியோர் சார்பில் காந்தியின்  உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் இந்நிகழ்ச்சிக்கு  ஜெய்ஹிந்த் பவுண்டேஷன் தலைவர் மற்றும்  நாராயணசாமி நாயுடு விவசாய சங்கத்தின் மாநில சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் நந்தகுமார் தலைமை தாங்கினார். மேலும் நாராயணசாமி நாயுடு விவசாய சங்கம் மற்றும் விராட் ஹிந்துஸ்தான் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பேரூர் நாகராஜ் கோவை மாவட்டத் தலைவர் அசோக் மற்றும் பலர் கலந்து கொண்டு காந்தியின்  உருவ படத்திற்கு குத்துவிளக்கேற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது

scroll to top