கவுண்டம்பாளையத்தில் கஞ்சா விற்றவர் கைது – 1.5 கிலோ கஞ்சா பறிமுதல்

WhatsApp-Image-2023-04-07-at-12.16.45.jpg

துடியலூர் காவல் துறையினருக்கு கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் கவுண்டம்பாளையம், SKR பார்க் பகுதிக்கு சென்ற காவல்துறையினர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த நபரை பிடித்தனர். அவரிடமிருந்து 1.5 கிலோ கஞ்சா 65 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர் கவுண்டம்பாளையம் பொங்காளியம்மன் தெருவை சேர்ந்த வினோத்குமார்(32) என்பது தெரியவந்தது. அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

scroll to top