கள்ளழகர் பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார்

vlcsnap-2023-05-05-19h11m43s527.png

மதுரையில் ஆண்டுதோறும், சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு, கள்ளழகர் மதுரை கோரிப்பாளையம் அருகே உள்ள வைகை ஆற்றில் இறங்கி பக்ர்க்கு காட்சியளிப்பது வழக்கம்.
அதன்படி, மதுரையில் கள்ளழகர் பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கி காட்சியளித்தார்.
முன்னதாக, இன்று அதிகாலை தல்லாகுளம் வெங்கடாஜலபதி ஆலயத்தில் இருந்து புறப்பட்டு, பல்வேறு திருக்கண்களில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது .

அதைத் தொடர்ந்து, இன்று காலை கள்ளழகர் கொட்டும் மலையில் வைகை ஆற்றில்
இறங்கி, பக்தர் காட்சி அளித்தார் . கள்ளழகர் இறங்குவதை முன்னிட்டு, மதுரை நகர் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வாகனங்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டன.

கள்ளழகர் ஆற்றில் இறங்கும் போது, தமிழக வணிகவரித்துறை அமைச்சர் பி மூர்த்தி, மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர், சட்டமன்ற உறுப்பினர்கள் வெங்கடேசன், தளபதி ஆகியோர்கள் கள்ளழகரை , மதுரை தொகுதி வரவேற்றனர் . பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கள்ளழகர் ஆற்றில் இறங்கி பல்வேறு திருக் கண்களில், சிறப்பு பூஜை நடைபெற்றது .

அழகர் வைகை ஆற்றில் இறங்கும் போது, பக்தர்கள், கோவிந்தா கோவிந்தா என பக்தி பரவசத்துடன் பெருமாளை வழிபட்டனர். மதுரை, திண்டுக்கல், தேனி ,விருதுநகர் ஆகிய பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல லட்ச பக்தர்கள் வைகை ஆற்றில் திரண்டனர். இந்த விழாக்கான ஏற்பாடுகளை, ஆலய தக்கார் வெங்கடாச்சலம், துணை ஆணையர் மு. ராமசாமி செய்திருந்தனர்.

scroll to top