கள்ளச்சாரயம் குடித்து உயிரிழந்த விவகாரம் – திமுக அரசை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

WhatsApp-Image-2023-05-20-at-13.45.28.jpg

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த விவகாரத்தில், திமுக அரசைக் கண்டித்து, மதுரையில் பாஜவினர் 100 க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பட்டதிலீடுபட்டனர்.

தமிழ்நாட்டில், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த விவகாரத்தில், திமுக அரசைக் கண்டித்து பல்வேறு அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.அதன் தொடர்ச்சியாக, மதுரை மாநகர் மாவட்ட பாஜக மகளிரணி சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள திருவள்ளுவர் சிலை முன்பாக 100க்கும் மேற்பட்ட பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறிப்பாக, தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும் சித்திரை திருவிழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த நபர்களுக்கு 10 லட்சம் வழங்க வேண்டும் என, கைகளில் பதாகைகளை ஏந்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

scroll to top