கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியை முழுமையாக திறக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ecr.jpg

​பன்னிரண்டாம் வகுப்பு மாணவி மரணத்தை தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தால் மூடப்பட்ட கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியை முழுமையாக திறக்க உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதி கனியாமூரில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவி மரணமடைந்த விவகாரத்தில் சமூக விரோதிகள் பள்ளிக்கு தீ வைத்ததுடன் பல கோடி மதிப்புள்ள வாகனங்களையும் தீ வைத்து எரித்தனர். இதையடுத்து காவல்துறை பள்ளிக்கு சீல் வைத்து, கலவரக்காரர்களை கைது செய்தது.

இந்த சம்பவங்களைத் தொடர்ந்து சீரமைக்கப்பட்ட கனியாமூர் பள்ளியை திறக்க பள்ளி நிர்வாகம் நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்தது. அதைத்தொடர்ந்து, முதலில் மேல்நிலைப்பள்ளிக்கான வகுப்புகள் திறக்கப்பட்டது. பின்னர் படிப்படியாக நான்காம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை வகுப்புகள் தொடங்கி  நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மார்ச் முதல் வாரத்தில் இருந்து எல்.கே.ஜி. முதல் தொடங்க அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.

scroll to top