கல் குச்சி கிராமத்தில் கிராம சபை கூட்டம் அமைச்சர் பங்கேற்பு

WhatsApp-Image-2022-04-24-at-11.38.38-AM.jpeg

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கல்குறிச்சி ஊராட்சி மன்றத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், பேசிய கிராம மக்கள் அடிப்படை வசதிகள் ,சாலை மேம்பாடு ஆகிய குறித்து பேசினர். இந்த கிராம சபை கூட்டத்தை, தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம்தென்னரசு தொடங்கி வைத்து பேசினார். அப்போது, அவர் பேசியது : தமிழக முதல்வர், மக்களின் எண்ணங்களைப் புரிந்து கொண்டு, திட்டங்களை தீட்டி வருகிறார். மக்களின் தேவைக்கேற்ப திட்டங்களில் நிறைவேற்றப்படும் என்றார் அமைச்சர். இந்த கிராம சபை கூட்டத்தில், ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் கிராம முக்கிய பிரமுகர்கள், அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை, கல்குறிச்சி ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் ஊராட்சி செயலாளர் செய்திருந்தார்.

scroll to top