கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை வழங்கி வந்த 2 வாலிபர்கள் கைது

DRUGS-HANDCUFF-scaled.jpg

கோவை செல்வபுரம் காவல் ஆய்வாளர் செல்வராஜ், உதவி ஆய்வாளர் சிலம்பரசன் ஆகியோர் நேற்று இரவு சொக்கம்புதூர் பள்ளி அருகே உள்ள பொதுக் கழிப்பிடம் அருகே ரோந்து வந்த போது சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த இரண்டு பேரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்களிடம் 100 போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்கள் கரும்புக்கடை சலாபத் நகரை சேர்ந்த நவாஸ் (29) உக்கடம் ஜி. எம். நகரை சேர்ந்த செரிப் (30) என்பது தெரிய வந்தது. கோவையில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு இவர்கள் இந்த போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்ததுள்ளனர். .இவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.​​

scroll to top