கல்லூரியில் கொரோனா தடுப்பூசி முகாம்

திருவேடகம் விவேகானந்த கல்லூரி மற்றும் மதுரை மேலக்கால் சுகாதார மையமும் இணைந்து
கொரோனா தடுப்பூசி முகாம் கல்லூரி வளாகத்தில் நடத்தியது.
இந்த நிகழ்வை, கல்லூரி முதல்வர் முனைவர் தி. வெங்கடேசன் துவக்கி வைத்தார். மேலக்கால் சுகாதார மைய மருத்துவர் கிஷாமகேஷ், சோழவந்தான் சுகாதார ஆய்வாளர்
கிருஷ்ணன், மேலக்கால் கிராம சுகாதார செவிலியர்கள் ரேவதி, புஷ்பலதா, காளீஸ்வரி, பதர்நிஷா, கவிதா ஆகியோர் மருத்துவ முகாமில் பணியாற்றினர். செயலர் சுவாமி வேதானந்த, குலபதி சுவாமி அத்யாத்மனந்த மற்றும் துணை முதல்வர் முனைவர் பார்த்தசாரதி,  அகத்தர உறுதி மையம் ஒருங்கிணைப்பாளர் முனைவர் சதீஷ்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பேராசிரியர் இரகு மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் முனைவர் சந்திரசேகரன், முனைவர் காமாட்சி, முனைவர் திருப்பதி, கணேசன், முனைவர் சீனிமுருகன், முனைவர் பிரேம்ஆனந்த், முனைவர் மோகன்ராஜ், மாரிமுத்து மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர் வெங்கடேசன் ஆகியோர் தடுப்பூசி முகாம் பணியினை கவனித்தனர். பணியாளர்கள், குடும்பத்தினர், மாணவர்கள் மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் 239 பேர் கோவியேட் ஷில்டு இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

scroll to top