மதுரை மாநகராட்சி, ஆரப்பாளையம் கிராஸ் ரோடு வெள்ளி வீதியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வருமுன் காப்போம் திட்டம் சிறப்பு மருத்துவ முகாமினை, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் , மேயர் வ.இந்திராணி , மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.அனீஷ ;சேகர், மாநகராட்சி ஆணையாளர் மருத்துவர். கா.ப.கார்த்திகேயன், ஆகியோர் துவக்கி வைத்து, பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்வதை பார்வையிட்டனர். தமிழ்நாடு முதலமைச்சர் , சீரிய செயல் பாட்டால் தமிழகத்தில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் நீரிழிவு மற்றும் உயர்ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு வீடு தேடி சிகிச்சை அளிப்பதோடு, மருந்துகளும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் தடுப்புபணியில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழக முதலமைச்சர், ஏழை எளியோர் வசிக்கும் இடத்திலேயே சிறப்பு மருத்துவச் சேவை அளிக்கும் வகையில், கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாமில், இதயநோய், மகப்பேறு, சிறுநீரகம், பல், கண், தோல், காது, மூக்கு, தொண்டை, எலும்பு மூட்டு மற்றும் மனநல மருத்துவம் ஆகிய 10 துறை சிறப்பு மருத்துவர்கள் மூலம் பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும் இம்முகாமில், இரத்த எச்.பி. அளவு, இரத்த அழுத்த பரிசோதனை, இரத்த சர்க்கரை அளவு, இரத்த கொழுப்பு அளவீடு, மலேரியா இரத்தத் தடவல், இ.சி.ஜி. கர்ப்பபைவாய், புற்றுநோய் பரிசோதனை, ஸ்கேன், கண்புரைஅளவு, 12-14 வயதுடைய சிறார்களுக்கு கோர்பிவேக்ஸ் தடுப்பூசி, 15-18 வயதுடையவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி, 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 60 வயது மேற்பட்டவர்களுக்கு கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசியும், கொரோனா சளி பரிசோதனை மற்றும் தடுப்பு அறிவுரைகள், டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. மருத்துவர்கள் பொது மக்களுக்கு பரிசோதனை செய்து, நோயை கண்டறிந்து மேல் சிகிச்சை தேவைப்படுவோர் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டு, உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்படுகிறது. பொதுமக்களை பரிசோதித்து நோய்களை முதலிலேயே கண்டறிந்து. அதற்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுவது இத்திட்டத்தின் சிறப்பு அம்சமாகும். எனவே, மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்கள் இதுபோன்று தொடர்ந்து நடைபெறும் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாமினை, பயன்படுத்திக் கொள்ளுமாறு மாநகராட்சியின் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது. இந்நிகழ்ச்சியில், துணை மேயர் தி.நாகராஜன், துணை ஆணையாளர் சங்கீதா, நகர்நல அலுவலர் மரு.ராஜா, மக்கள் தொடர்பு அலுவலர்கள் சாலிதளபதி, மகேஸ்வரன், உதவி நகர்நல அலுவலர் மரு.தினேஷ்குமார், உதவி ஆணையாளர் ரமேஷ், சுகாதார அலுவலர் ராஜ்கண்ணன் மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம்”சிறப்பு மருத்துவ முகாம்
