மாணிக்கம் தாகூர் அலுவலகம் முன்பு, ஏராளமான காங்கிரசார் , தற்போது நடைபெற்று வரும் கர்நாடக தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் மொத்தம் உள்ள 224 தொகுதிகளில், பெரும்பான்மை இடங்களை பிடித்து வெற்றி அடைந்துவரும் நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு மகுடம் சூட்டும் விதமாக, மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி செயலாளர் அம்மாபட்டி பாண்டி தலைமையில், நிர்வாகிகள் ,மேற்கு வட்டாரத் தலைவர் சுப்பிரமணியன், சரவணபகவான், வார்டு தலைவர் முனியசாமி, திருமங்கலம் நகர தலைவர் சௌந்தரபாண்டி, நகராட்சி கவுன்சிலர் அமுதா சரவணன், உச்சப்பட்டி முன்னாள் பஞ்சாயத்து தலைவர் உலகநாதன் , காங்கிரஸ் கட்சியின் மூத்த பேச்சாளர் பொன் மனோகரன் உள்ளிட்ட காங்கிரசார் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும், உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், பல்வேறு பகுதியில் உள்ள காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் பங்கு கொண்டனர்..
கர்நாடக தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளமைக்கு காங்கிரசார் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டம்
