கர்நாடகா மாநிலத் தேர்தல்: 130 இடங்களில் காங்கிரஸ் முன்னிலை மதுரையில் பட்டாசு வெடித்து லட்டு கொடுத்து கொண்டாடிய காங்கிரஸ் கட்சியினர்

WhatsApp-Image-2023-05-13-at-3.51.23-PM.jpeg

கர்நாடகா மாநில தேர்தல் முடிவுகள் காலை முதல் வெளியாகி வருகின்றனர். இதில் காங்கிரஸ் காங்கிரஸ் கட்சி 130க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. இதில் பெரும்பாலான இடங்களில் வெற்றியை பதிவு செய்து வருகிறது.

இதற்கு அடுத்தபடியாக பாஜக 66 இடத்திலும், மதசார்பற்ற ஜனதா தளம் 21 இடங்களிலும் முன்னிலை வைக்கின்றன.

இதனை காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதிலும் கொண்டாட வரும் நிலையில் மதுரை அண்ணாநகர் பகுதியில் அமைந்துள்ள மாநகர காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன்பாக திரண்ட கட்சியினர் மாநகரத் தலைவர் கார்த்திகேயன் தலைமையில் பட்டாசுகள் வெடிக்கும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

scroll to top