கரூர், நாமக்கல் பகுதிகளில் திடீர் நில நடுக்கம்

இன்று காலை  கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களின் சில பகுதிகளில்  நில அதிர்வு ஏற்பட்டதாக மக்கள் அதிர்ச்சியுடன் தெரிவித்து உள்ளனர்.  கரூரில் ஜவகர் பஜார், தான்தோன்றி மலை, லைட் ஹவுஸ் கார்னர், கருப்புக்கவுண்டன் புதூர் பகுதிகளில் திடீர் நில அதிர்வு ஏற்பட்டது. கரூர் நகர பகுதியில் உள்ள உணவகத்தில் உள்ள கண்ணாடிகள் உடைந்து விழுந்தாகவும்,. இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும்,  நாமக்கல் மாவட்டத்தின் சில இடங்களில் நில அதிர்வு ஏற்பட்டு இருக்கிறது. நாமக்கல்லில் திடீரென பலத்த சப்தத்துடன் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சமடைந்தது, வீட்டை விட்டு வெளியே ஓடிச் சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது. இன்று காலை  இந்தோனேஷியாவில் 7.6 அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதுடன், அங்கு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்ட நிலை யில், இந்தியாவுக்கு பாதிப்பு இல்லை என இந்திய சுனாமி ஆய்வு மையம் தகவல் கூறியது. ஆனால், தமிழ்நாட்டின் சில பகுதிகளில் நிலஅதிர்வு காணப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

scroll to top