கருவேலம்பட்டி கிராமப் பகுதியில் கொட்டி எரிக்கப்படும் மின்வாரிய கழிவுகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகாவிற்கு உட்பட்ட நிலையூர் II வது பிட் பகுதியை சேர்ந்தது கருவேலம் பட்டி கிராமம்.

இக்கிராமத்தில், சுமார் 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக இப்பகுதியில் தொடர்ந்து மின்வாரிய கழிவுகள் மற்றும் கப்பலூர் பகுதியில் அமைந்துள்ள தொழிற்பேட்டையில் வீணாகும் கழிவுகள் என அனைத்துக் கழிவுகளையும் லாரிகள் மூலம் கொண்டு வரப்பட்டு, கருவேலம் பட்டி கிராமத்தில் உள்ள காலியிடங்களில் கொட்டி செல்கின்றனர்.

இதனைக் காணும் பழைய பொருட்கள் மற்றும் இரும்பு சாமான்களை எடைக்கு போட்டு சம்பாதிக்கும் கும்பல் வீணாக கொட்டப்படும் மின்வாரிய கழிவுகளில் உள்ள இரும்புகளை எடுப்பதற்காக இவற்றிற்கு நெருப்பு வைப்பதாகவும் அதன்மூலம் வெளிவரும் நச்சு கரும்புகையால் கருவேலம்பட்டி கிராமத்தில் வசித்து வரும் பெண்கள், குழந்தைகள் என அனைவரும் மிகுந்த அவதிக்கு உள்ளாகி சுவாச நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் இக்கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், புகையினால் சுற்றுச் சூழல் பாதிப்படைகிறது.

எனவே, இந்த பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணும் வகையில் உரிய அரசு அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுத்து தங்களது கிராமத்தை காப்பாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை கருவேலம் பட்டி கிராம மக்கள் முன்வைத்துள்ளனர்.

scroll to top