சோழவந்தான் அருகே, கருப்பட்டி அரசு உயர் நிலைபள்ளியில் 17- ஆண்டு முன்பு படித்த மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. சோழவந்தான் அருகே கருப்பட்டி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 2004 ஆம் ஆண்டு இங்கு படிப்பு முடித்த மாணவ, மாணவிகள் சந்திப்பு விழா நடந்தது. இவ்விழாவிற்கு, தலைமையாசிரியை மலர்விழி தலைமை தாங்கினார்.
பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஜெயக்கொடி முன்னிலை வகித்தார். முன்னாள் மாணவி அஞ்சுகம் வரவேற்றார். இவர்கள் படிக்கும்போது, பணியாற்றிய தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் தற்போது, பணியாற்றும் தலைமை ஆசிரியர் ஆசிரியர்களுக்கு முன்னாள் மாணவர் தீயணைப்பு நிலைய காவலர் கௌசிங்கன், நினைவு பரிசு வழங்கினார். மாணவ,மாணவி சார்பாக தாங்கள் படித்த பள்ளிக்கூடத்திற்கு டேபிள்,சேர் மற்றும் பேன் வழங்கினார்கள். முன்னாள் மாணவர் புகழேந்தி நன்றி கூறினார்.