கருணாநிதி நூற்றாண்டு விழாவில் அதிக உறுப்பினர் சேர்ப்பவர்களுக்கு 10000 பரிசு – காரியாபட்டி தி.மு.க ஆலோசனை கூட்டத்தில் முடிவு

WhatsApp-Image-2023-04-03-at-15.39.18.jpg

விருதுநகர் வடக்கு மாவட்டம் , காரியாபட்டி கிழக்கு ஒன்றிய திமுக நிர்வாகிகள் ஆலோசனைக்
கூட்டம் முடுக்கங் குளம் கிராமத்தில் நடைபெற்றது.

ஒன்றிய அவைத்தலைவர் மகேந்திர சாமி தலைமை வகித்தார் .ஒன்றியச் செயலாளர் செல்லம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் , மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் .

கூட்டத்தில், பொதுக்குழு உறுப்பினர் சிவசக்தி பேசும்போது : கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தீவிர உறுப்பினர்கள் சேர்க்கும் பணி தொடங்கப் பட்டுள்ளது.

விருதுநகர் வடக்கு மாவட்டம் , காரியாபட்டி கிழக்கு ஒன்றிய த்தில் அதிகமான உறுப்பினர்களை சேர்ப்பவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் பரிசு தொகை வழங்கப்படும் என்று அறிவித்தார். கூட்டத்தில்,
ஊராட்சி மன்றத் தலைவர் சாந்திமுத்துச்சாமி, ஒன்றிய துணைச் செயலாளர் கந்தசாமி மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மாவட்ட கவுன்சிலர் தங்க தமிழ்வாணன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள சேகர், சிதம்பர பாரதி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

scroll to top