கண்மாயில் தவறிவிழுந்த பெண் தண்ணீரில் மூழ்கி பலி

மதுரை டிச 21 பெருங்குடியில் கண்மாயில் தவறி விழுந்து பெண் பலியானது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை அருகே ஓ.ஆலங்குளத்தை சேர்ந்தவர் வீரபாண்டி மனைவி சசிகலா 34 .இவர் அதிகாலை கண்மாய் கரையோரம் சென்றார். அப்போது தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி பலியானார்.இந்த சம்பவம் குறித்து அவருடைய அண்ணன் தாமோதரன் பெருங்குடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சசிகலாவின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

scroll to top