கண்ணில் கருப்பு துணி கட்டி மதுரை கல்லூரிக் கல்வி இணை இயக்குனர் அலுவலகம் முற்றுகை

தேனி மாவட்டம் கோட்டூர் அரசு மற்றும் கலை அறிவியல் கல்லூரியில் பணியாற்றி வரும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு 19 மாத சம்பளம் வழங்கப்படவில்லை.

இதுகுறித்து, தமிழக முதல்வர், உயர்கல்வித்துறை அமைச்சர் உயர்கல்வித்துறை செயலாளர் கல்லூரிக் கல்வி இணை இயக்குனர் கல்லூரி முதல்வர் உள்ளிட்டவர்களிடம் பலமுறை மனு அளித்து வந்தனர்.

இந்த நிலையில், இது குறித்து கடந்த 19 மாதங்களாக சம்பளம் வழங்காமல் கௌரவ விரிவுரையாளர்கள் தொடர்ந்து அளித்து வந்தனர். மேலும் ,கோட்டூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்கள் மட்டும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது
ஆண்டிபட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அங்கு தொடர்ந்து பணியாற்ற கல்லூரி முதல்வர் அனுமதி வழங்கி பணியாற்றி வருகின்றனர்.

ஆனால், தேனீ மாவட்டம் கோட்டூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கடந்த அதிமுக ஆட்சியில் பணியாற்றிய முன்னாள் கல்லூரி முதல்வர் சுப்புராஜ் அதற்கு அடுத்து வந்த கல்லூரி முதல்வர் செல்வராஜ் உள்ளிட்டவர்கள் கல்லூரியில் பணியாற்றி வரும் கௌரவ விரிவுரையாளர்கள் அரசு மூன்று ஆண்டுகாலம் கால அவகாசம் வழங்கி தகுதியை வளர்த்துக்கொள்ள அரசு அறிவித்துள்ள சலுகையை மறைத்து விட்டனர்.

இதனால், கல்லூரியை விட்டு வெளியேற வேண்டும் என்று அறிவித்துவிட்டனர் தற்போது பணியாற்றும் கல்லூரி முதல்வர் சுல்தான் உரிய அனுமதி பெற்றால் மட்டுமே கல்லூரியில் பணியாற்ற அனுமதி வழங்கப்படும் என்று தெரிவித்துவிட்டார்.

இதனைத் தொடர்ந்து, கோட்டூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணியாற்றிய ஆசிரியர்கள் மதுரை கல்லூரி கல்வி இணை இயக்குனரை பலமுறை தொடர்பு கொண்டும், உயர்கல்வித்துறை செயலாளர் பலமுறை தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.

இதனைத் தொடர்ந்து, உயர்கல்வித்துறை அமைச்சர், தமிழக முதல்வரையும் மனு அனுப்பியுள்ளனர். உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தால், கண்ணில் கருப்பு துணி கட்டி 19 மாத சம்பளம் வழங்க கோரியும் ,மீண்டும் கல்லூரியில் பணியாற்ற அனுமதி வழங்க கோரியும் மதுரையில் உள்ள கல்லூரிக் கல்வி இணை இயக்குனர் அலுவலகம் முன்பாக முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்து, கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றிய கௌரவ விரிவுரையாளர் வேல்முருகன் கூறுகையில் கடந்த ஒன்பது ஆண்டுகளாக நாங்கள் குறைவான சம்பளத்தில் கோட்டூர் அரசுகளை மற்றவர்களின் பணியாற்றி வந்தோம் கடந்த 19 மாதங்களாக சம்பளம் வழங்கப்படாத காரணத்தால் தங்களுடைய வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு கஷ்டப்பட்டு வருகிறோம்.

2019 முதல் 2020 வரை பணியாற்றிய 19 மாதங்கள் சம்பளம் வழங்கப்படவில்லை.மதுரை கல்லூரி கல்வி இணை இயக்குனர் அலுவலகத்தில் 7 முறை மனு கொடுத்தும் உயர்கல்வித்துறை செயலாளர் அலுவலகத்தில் 5 முறை மனு கொடுத்தும் உரிய நடவடிக்கை இதுவரை எடுக்கப்படவில்லை.

ஆண்டிபட்டி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணியாற்றும் இதற்கு அனுமதி வழங்கி சம்பளம் வழங்கப்படுகிறது. ஆனால், கோட்டூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சம்பளம் வழங்காமல் பணியாற்ற அனுமதி வழங்காமல் நிறுத்தி வைத்துள்ளனர்
எனவே, உடனடியாக நிறுத்தி வைக்கப்பட்ட சம்பளம் மற்றும் பணியாற்ற அனுமதி வழங்க வேண்டும்என்று தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்

scroll to top