கடைக்கு சென்ற பெண்ணை கையை பிடித்து இழுத்த வாலிபர் கைது

அவனியாபுரத்தில் மளிகை கடைக்கு சென்ற இளம் பெண்ணை கையை பிடித்து இழுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
அவனியாபுரம் காவேரி நகர் 4-வது தெருவைச் சேர்ந்தவர் 35 வயது இளம்பெண் .அவர்
அதே பகுதியில், உள்ள ஒரு மளிகைக் கடைக்குச் சென்றார். அப்போது, வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்த சண்முகவேல் மகன் செல்வமுருகன் 21. என்ற வாலிபர் அந்த பெண்ணை கையை பிடித்து இழுத்து மானபங்கம் படுத்தியுள்ளார். இது குறித்து அந்த பெண் அவனியாபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து வாலிபர் செல்வ முருகனை கைது செய்தனர்.

scroll to top