கடற்கரை சாலையில் குடியரசு தின விழா, அழைப்பிதழ் உள்ளோருக்கு மட்டுமே அனுமதி

நாட்டின் 73-வது குடியரசு தினவிழா கொண்டாட்டங்கள் நாளை நாடு முழுவதும் கொண்டாடப்படவிருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் சென்னை கடற்கரை சாலையில், தமிழக அரசு சார்பில்  குடியரசு தினவிழா நடைபெற உள்ளது.

இந்த விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்று தேசிய கொடியை ஏற்றுகிறார். கடற்கரை தீவுத்திடல் அருகே உள்ள  போர் நினைவுச் சின்னத்துக்கு சென்று மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார்.பிறகு, காமராஜர் சாலையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்று தேசிய கொடியை ஏற்றுகிறார். தொடர்ந்து, பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு  முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்குகிறார். வீரச்செயலுக்கான அண்ணா பதக்கம், கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கம், சிறந்த விவசாயிகளுக்கான விருது, காந்தியடிகள் காவல் பதக்கம் உள்ளிட்ட பல்வேறு பதக்கங்கள் வழங்கப்பட உள்ளன. குடியரசு தினவிழாவுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலைடயில், அலங்கார ஊர்திகள் தயார் செய்யப்பட்டுள்ளன. ஒத்திகை நிகழ்ச்சிகளும் நடந்து முடிந்துள்ளன.

scroll to top