தமிழ்நாட்டில் கொரோனா கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு டிசம்பர் 15ந்தேதியுடன் முடிவடைய இருப்பதால், தலைமைச் செயலகத் தில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கைஎப டிசம்பர் 31ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார். அதன்படி, கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது அனைத்து கடற்கரைகளிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. டிசம்பர் 31 முதல் ஜனவர் 1ம் தேதி வரை 2 நாட்கடள கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு விதிமுறைகளுடன் அனைத்து நீச்சல் குளங்களும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் அனைத்திற்கும் கூட்ட அரங்குகள் பயன்படுத்த அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.