கடந்த ஓராண்டில் 45 மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளது – அமைச்சர் செந்தில் பாலாஜி

டாஸ்மாக் பார் ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு வெளிப்படையாக உள்ளது எனத் தெரிவித்த அவர், ஒப்பந்தப்புள்ளியில் யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம். அனைவருக்கும் விண்ணப்பம் விநியோகிக்கப்பட்டுள்ளது. இந்த டெண்டர் தொடர்பாக எந்த இடத்திலும் புகார்கள் இல்லை.  தனி நபர்கள் அவர்களுக்குள்ளாகவே பேசி தவறான முறையில் கருத்தை வெளியிடுகின்றனர். தவறுகள் நடைபெற்றால் கவனத்திற்குக் கொண்டு வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஓராண்டில் பொதுமக்களின் கோரிக்கை அடிப்படையில் 45 மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளது எனக் கூறினார்.

scroll to top