கஞ்சா செடிகளை வளர்த்த நபர் கைது

ganja5.jpg

போதை பொருட்கள் விற்பனையை தடுக்கும் விதமாக கோவை மாவட்ட காவல் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் கோவில்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சொரியம்பாளையம் என்ற பகுதியில் கஞ்சா செடி வளர்த்து வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் கோவில்பாளையம் காவல் உதவி ஆய்வாளர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அங்குள்ள தனியார் பேக்கரி அருகில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பின்டு கேவட்(25) என்ற இளைஞர் கஞ்சா செடிகளை வளர்த்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து நான்கு கஞ்சா செடிகள் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

scroll to top