ஓபிஎஸ் க்கு கோவையில் ஆயுர்வேத சிகிச்சை

​அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கோவையில் உள்ள ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் மீண்டும் சிகிச்சை பெறவுள்ளார்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஐந்துக்கும் மேற்பட்ட முறை கோவை வந்து கோவையில் உள்ள ஆயுர்வேத மருத்துவமனையில் புத்துணர்வு சிகிச்சை பெற்றுள்ளார். இந்நிலையில், சிகிச்சை பெறுவதற்காக தற்போது ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் இருந்து விமானம் மூலம் திங்கட்கிழமை இரவு கோவை வந்தார். கணபதியில் உள்ள ஆயுர்வேத மருத்துவமனைக்கு சென்ற அவருக்கு செவ்வாய்க்கிழமை காலை முதல் ஆயுர்வேத சிகிச்சை தொடங்கியது.

முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இன்னும் சில நாட்கள் கோவையிலேயே தங்கி சிகிச்சை எடுப்பார் எனக் கூறப்படுகிறது.

scroll to top