ஓபிஎஸ்ஸிற்கு சூறாவளி இபிஎஸ்ஸிற்குப் பருவக்காற்று!:அதிமுக பொதுக்குழு நடக்குமா?

Pi7compressedepscopy.jpg

  THE KOVAI HERALD  

எதிர்வரும் 11-ம் தேதி பொதுக்குழு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிமுக வில் நீடிக்கிறது ஏககளே பகாரங்கள். கூடவே ஏறு முகமாக ஏறி கொரானா அச்சுறுத்தி வருகிறது. தமி ழக அரசின் சுகதாரத்துறை விதிமுறைகளை கூட்டிக் கொண்டே செல்கிறது. இந்த சூழ்நிலையில் அதிமுகவின் பொதுக்குழு திட்டமிட்டபடி நடக்குமா? என்ற கேள்விக்குறியில் சிக்கித் தத்தளிக்கிறது.
கடந்த மாதம் 23- ஆம் தேதி அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. குழப்பம், கூச்சல், பரபரப்பு என்று நிறைவடைந்தது அக்கூட்டம். தொடர்ந்து அன்று நிறைவேற்றின கட்சியின் 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டது என்றும் அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கி ணைப்பாளர் ஆகிய பதவிகள் காலாவதியாகி விட்டதாகவும் இபிஎஸ் ஆதரவு நிர்வாகிகள் கூறி னர்.
இதனிடையே ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள இடங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இவற்றில் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், நகராட்சி மற்றும் மாநகராட்சி கவுன்சிலர் உள்ளிட்ட 34 பதவியிடங்ளுக்கு கட்சி அடிப்படையில் தேர்தல் என்பதால் வேட்பாளர்களுக்கு கட்சித் தலைமையே கடிதம் கொடுத்தாக வேண்டும். அந்த வகையில் இந்த பதவிகளுக்கு கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு அந்த கட்சிகளின் சின்னங்களை ஒதுக்கீடு செய்ய ஏ மற்றும் பி என்ற இரண்டு படிவங்களை சமர்பிக்க வேண்டும். இந்த படிவங்களில் சம்பந்தபட்ட கட்சியின் சார்ந் தவர்களின் தலைவர்கள் கையெழுத்து இருக்க வேண்டும்.
அதற்கென ஓ.பன்னீர் செல்வம் ஒருங்கிணைப் பாளர் என்ற பெயரில் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் அனுப்பினார். இதனை நிராகரித்தார் எடப்பாடி பழனிசாமி. இப்படி ஏன் ஓபிஎஸ் கடிதம் நிராகரிக்கப்பட்டது என்று விளக்க கடிதம் ஒன்றையும் வெளியிட்டார்.
அதில், ‘ஓ.பன்னீர் செல்வத்தின் பொறுப்பு பொருளாளர் மட்டுமே. என் பொறுப்பு தலைமை நிலையச் செயலாளர்!’ என்று குறிப்பிட்டிருந்தார். அதிமுக பொதுக்குழுவில் அனைத்து தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டுள்ளது. எனவே ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணை ப்பாளர் பதவிகள் காலாவதி யாகிவிட்டது என்றும் இதற்குக் காரணம் கூறப்பட்டிருந்தது.
அதை உறுதிப்படுத்தும் வகையில் தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தனது ட்விட்டர் பக்கத்தில் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பயோவை தலைமை நிலையச் செயலாளர் என்று மாற்றியுள்ளார். இதன் பின்னே அதிமுகவின் இருபிரிவினரிடையேயும் ஏக களேபகாரங்கள் நடந்து வருகிறது.
இதற்கிடையே சென்னை, செங்கல்பட்டு, கோயமுத் தூர் உள்ளிட்ட முக்கிய மாவட்டங்களில் கொரானா வின் தாக்கம் கூடுதலாகி வருகிறது. இந்த மாவட்டங்க ளில், ‘பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும், விதிமுறை மீறுவோருக்கு ரூ.500 அபாரதம். எங்கேயும் கூட்டம் கூடக்கூடாது!’ என்ற அறிவிப்புகள் சுகா தாரத்துறையிடமிருந் தும், மாவட்ட ஆட்சியர் களிடமிருந்தும் வந்த வண்ணம் உள்ளது.
ஒரு பக்கம் கொரானா பரவல் இருந்தாலும், அரசியல் ரீதியாக இந்த பொதுக்குழு கூடக்கூடாது. அங்கே புதிதாக அக்கட்சிக்குப் பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்டு விடக்கூடாது. அப்படி ஏகமனதாக தேர்ந் தெடுக்கப்பட்டு விட்டால், அதிமுகவின் பலத்தை தமிழகத்தில் அசைக்கவே முடியாது. முக்கியமாக இரட்டை இலையை முடக்கிப் போடுவதற்கான சாத்தியக்கூறுகளுக்கு வாய்ப்பே இல்லாமல் போய் விடும்!’ என்று ஆளும் திமுக கருதுவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. அதற்காகவேனும் குறிப்பிட்ட நாட்களில் பல்லாயிரக்கணக்கானோர் அதிமுக பொதுக்குழுவுக் காக கூடாதிருக்கப் பார்த்துக் கொள்ளவும், தேவைப்பட்டால் ஊர டங்கு போடக்கூட வாய்ப்பிருப்பதாகவும் அரசியல் நோக்கர்களிடம் கருத்துக்கள் புறப்பட்ட வண்ணம் உள்ளது.
எது எப்படியானாலும், எங்காவது கூட்டம் கூட்டியா வது இந்த முறை தன் கீழ் ஒற்றைத் தலைமையை ஏகோபித்த நிர்வாகிகள் ஆதரவுடன் உருவாக்க முடிவு செய்து விட்டார் எடப்பாடி பழனிசாமி. அதற்கான மூவ்களை ரொம்ப அதிரடியாகவே நகர்த்திக் கொண்டிருக்கிறார். கடந்த பொதுக்குழுவிலேயே 99 சதவீதம் பேர் எடப்பாடி பழனிசாமிக்கே ஆதரவுக் கரம் நீட்டுகிறார்கள் என்பதை அறிந்து கொண்ட ஓ.பன்னீர் செல்வம் ‘எப்படியெல்லாம் இதை தடுத்து நிறுத்துவது, அது குறுக்கு வழியாக இருந்தாலும் தப்பில்லை!’ என்றே ஆலோசித்து வருவ தாக சொல்கிறார்கள் கட்சிக்காரர்கள்.
இது குறித்து சில கட்சி நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம்.
“1980 எம்.ஜி.ஆர். காலத்திலிருந்தே கட்சியில் இருக்கிறார் ஓபிஎஸ். ஆனால் எந்த இடத்திலும் தனக்கென ஓர் அணியை உருவாக்கிக் கொள்ளவில்லை. தனக்காக நின்றவர்களுக்கும் ஏதும் செய்ததில்லை. அதுவே அவருக்கு பலஹீனம். கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்தான் என்றாலும் எல்லா முடிவுகளையுமே எடப்பாடியே எடுத்தார். அதற்கு அவர் கையில் முதல்வர் பதவி இருந்தது. இப்போது எதிர்கட்சித் தலைவர் பதவி உள் ளது. ஓபிஎஸ்ஸைத் தனிமைப்படுத்த எடப்பாடி பழனிசாமி, பொதுக் குழு உறுப்பினர்களில் துவங்கி, மாவட்டச் செயலாளர், வட்டச் செயலாளர்வரை தன்வசம் இழுத்துவிட்டார். இப்போது 90 சதவீத நிர்வாகிகள் அவர் பக்கம்தான் இருக்கிறார்கள். இணக்கமாக இருங்கள். கா லம் கனியும் என்று நெருக்கமானவர் கள் சொன்னாலும் கேட் கும் சூழ்நிலையில் ஓபி எஸ் இல்லை.இந்த விவகாரத் தில் பா.ஜ.க. என்ன நிலைப்பாடு தனக்கு சாதகமாக இருப்பதையே அவர் விரும்புகிறார். அதன் மூலமே கோர்ட் நட வடிக்கை, தேர்தல் கமிஷ னின் தன் குரல் எடுபட வைக்க முடியும் என நம்புகிறார்.!’’ என்றனர்.
ஜெயலலிதாவின் மீது வம்பு வழக்குத் தீர்ப்பு வந்து முதல்வர் ஆக முடியாமல் போன காலகட்டத்தில் எல்லாம் அவரின் முதல்வர் நாற்காலியில் பவ்யமாக நிரம்பினார் ஓபிஎஸ். அதை முன்னிட்டு ஒரு கூட்டத்தில் ஜெயபேசும் போது, “நம்பிக்கை, விசுவாசம் என்றால் ஓ.பன்னீர்செல்வம்தான்” என்று குறிப்பிட்டார் ஜெயலலிதா. தனக்காக முதல்வர் பதவியை ராஜி நாமா செய்யும்படி சசிகலா சொன்னபோதோ முரண்டு பிடித்தார்.
அதற்குப் பிறகு அவர் செய்த தர்மயுத்தமும் அதன் விளைவுகளும் இரட்டை இலைச் சின்னத்தை முடக்குமளவுக்குச் சென்றன. அப்போது இவர்கள் தமிழகத்தின் ஆட்சியதிகாரத்தில் இருந் தார்கள். அந்த இலை சின் னம் கட்சிக்கு வந்து சேர இருவரும் ஒன்று சேர்ந்தா ர்கள். அதற் குப் பிறகு அவரிடம் ஏகப்பட்ட முரண்கள். அதில் கூட தன்னை நம்பி வந்த தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் அவர் ஏதும் செய்யவில்லை. அதனால்தான் இப்போது அவருக்கு எதிராக பெரும் அரசியல் சூறாவளி வீசிக் கொண்டிருக்கிறது. அதில் ஓபிஎஸ் மட்டுமே தனித்து பறந்து எங்கோ சென்று கொண்டிருக்கிறார். தான் அந்த சூறாவளிக்குள் சிக்கிக் கொள்ளாது இருக்க வேண்டுமானால் கட்சிப் பொதுக்குழுவில் ஏகோபித்த நிர்வாகிகள் முடிவை ஏற்றுக் கொண்டு கமுக்கமாக செல்வது ஒன்றே வழி. இல்லாவிட்டால் ஓபிஎஸ் என்பவர் இப்படியொரு இடத்தில் இருந்தார் என்பதே தெரியாமல் போவதற்கே வாய்ப்புகள் நிறைய!’’ என்கிறார்கள் அதிமுகவின் மூத்த முன்னோடிகள். என்ன செய்யப்போகிறார் ஓபிஎஸ். இந்த முறையும் பொறுத்திருந்து பார்ப்போம்

KAMALAKANNAN.S  Ph. 9244319559 

scroll to top