சென்னையில் 1489 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 5,66,801 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று சுமார் 800 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்றைய எண்ணிக்கை 1500 ஐ நெருங்கி உள்ளது. இது மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை 8,656 பேர் மரணம் அடைந்துள்ளனர். இன்று 161 பேர் குணம் அடைந்து மொத்தம் 5,52,552 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது சென்னையில் 5,593 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில் 2,731 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 27,58,587 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். தமிழக தினசரி கொரோனா பாதிப்பில் கோவை 120 உடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.