ஒரே ஆண்டில் 20 ஆண்டு கால சாதனைதமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க ஆட்சி அமைந்து ஒரு ஆண்டு நிறைவு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் அறிக்கை

karthic-copy.jpg

தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க ஆட்சி அமைந்து ஒரு ஆண்டு காலம் நிறைவடைந்த நிலையில் இந்த ஓர் ஆண்டில் முதல்வர் செய்த சாதனைகள் குறித்து கோவை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியதாவது கடந்த ஆண்டு மே திங்கள் 7 ஆம் நாள், ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்…’ எனும் கணீர் குரலில் “தமிழ்நாட்டு அரசின் முதலமைச்சராக உண்மையாகவும், உளச்சான்றின்படி யும் என் கடமைகளை நிறை வேற்றுவேன்” என்று பதவி ஏற்றார் முதல்வர் ! இந்த ஒரு ஆண்டில்தான் எத்தனை எத்தனை சாதனைகள், ஒரே ஆண்டில் 20 ஆண்டு கால சாதனைகள் . ஒவ்வொரு வினாடியும் தமிழக மக்களுக்காக முதல்வர் சிந்தித்து செயல் படுத்திய திட்டங்கள் ஒரு வரலாற்று பெட்டகம்! முதல்வர் மு.க.ஸ்டாலினின் தொலைநோக்கு திட்டங்கள் தமிழகத்திற்கு, தமிழக மக்களுக்கு வாழ்வில் ஒளி ஏற்றிய திட்டங்கள் . அவற்றுள் சில முக்கியமான திட்டங்கள்: 4000 ரூபாய் கொரோனா கால நிவாரண நிதி வழங்கப்பட்டது!, ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டது!, மகளிருக்கு விலையில்லா பேருந்து பயண திட்டம் நிறைவேற்றப்பட்டது! , தனியார் மருத்துவமனையிலும் கொரோனாவுக்கு இலவச சிகிச்சை திட்டம் நடைமுறைக்கு வந்தது!, உங்கள் தொகுதியில் முதல்வர் என்ற திட்டத்திற்கு தனித்துறை முதல்வரின் நேரடி கண்காணிப்பில் நிறுவப்பட்டது!, கொரோனா பரவலை தடுக்க மாவட்டம் தோறும் வார் ரூம் நிறுவி ஒருங்கிணைந்த செயல்பாடு!, பத்திரிக்கை ஊடகவியலாளர்கள் – தமிழகத்தில் முன்களப் பணியாளர்களாக அறிவிப்பு!, கொரோனாவுக்கு பலியான மருத்துவ துறையினர் குடும்பங்களுக்கு 25 லட்சம் உதவித்தொகை!, அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 14 வகையான மளிகைப் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டது!, செவிலியர்கள் / தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் ஊக்கத்தொகை!, மாற்றுத்திறனாளிகள் திருநங்கைகளுக்கும் அரசு பேருந்தில் இலவசப் பயண திட்டம்!, தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்ட வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்பட்டது!, கொரோனா தொற்றினால் பெற்றோரை இழந்த குழந்தையின் பெயரில் ரூ.5 லட்சம் வைப்பு நிதி மற்றும் அவர்களின் பட்டப்படிப்பு வரையில் கல்வி – விடுதிச் செலவை அரசே ஏற்கும்., துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தோரின் வாரிசுகள் 17 பேர்களுக்கு அவர்களின் கல்வித்தகுதிக்கு ஏற்ப அரசுப் பணி, அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற 2457 ஊழியர்களின் ஓய்வூதிய நிலுவைத் தொகை 497.32 கோடி கொடுக்கப்பட்டது!, கோயில்களின் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள் போன்றோருக்கு நிவாரண உதவித்தொகை ரூ.4000 வழங்கப்பட்டது!, இந்திய அளவில் 27% ஓபிசி இடஒதுக்கீடு சட்ட போராட்ட வெற்றி, தமிழ்நாட்டு வேலையில் தமிழ் இளைஞர்களுக்கு 75% முன்னுரிமை!, முதலீட்டாளர்களின் முதல் முகவரி – தமிழ் நாடு என்ற செயல் திட்டத்தில் 47 தொழில் திட்டங்கள் ரூ.28,664 கோடி முதலீடுகள், உங்கள் தொகுதியில் ஸ்டாலின் திட்டத்தில் இது வரை 1 லட்சத்துக்கும் அதிகமான பயனாளிகள்!, “நீட்” ஆய்வு குழுவுக்கு சட்டப்போராட்டம்!,மக்களை தேடி மருத்துவம் திட்டம், விவசாயத்திற்கு முதன் முறையாக தனி பட்ஜெட், தொழிற்கல்வி படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு !, முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு அரசு வேலைகளில் முன்னுரிமை அறிவிப்பு!, பயிற்சி மருத்துவர்,முதுகலை மேற்படிப்பு மருத்துவர்களுக்கு உதவித்தொகை உயர்த்தி அரசாணை!, கூட்டுறவு சங்கங்களில் 5 சவரன் நகை கடன் தள்ளுபடி , அரசு பணியில் வடமாநிலத்தவர் விண்ணப்பிக்க அனுமதி இல்லை!, இந்தியாவின் சிறந்த 10 முதல்வர்கள் பட்டியலில் முதல்வர் ஸ்டாலின் முதலிடம், விவசாயிகளுக்கு ஒரு லட்சம் மின் இணைப்பு, 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும் இலவச பேருந்து பயணம், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான 2 ஆயிரம் கோடி மதிப்பிலான கடன்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது, பொங்கல் திருநாளை முன்னிட்டு 21 பொருட்கள் கொண்ட பொங்கல் பரிசு, தமிழக அரசின் நிதிப் பற்றாக்குறை 58,692.68 கோடியிலிருந்து 55,272.79 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது, இல்லம் தேடி கல்வி திட்டம், அரசு பள்ளியில் படித்த மாணவிகளுக்குக் கல்லூரி சென்று உயர் கல்வி படிக்க ஒவ்வொரு மாதமும் 1000 ஆயிரம் ரூபாய் நிதியுதவி, சாலை விபத்துகளில் சிக்கியோரைக் காக்க, ‘இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் 48’ என்ற மனிதநேய திட்டம்; இப்படி பொறுப்பேற்றது முதல் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நூற்றுக்கணக்கான திட்டங்களை நிறைவேற்றி தமிழ் மக்கள் அவர்களின் நலனே தனது நலன் என்று உறுதி ஏற்று திறம்பட செயல்பட்டு வருகிறார். முன்னாள் முதல்வர் கருணாநிதி மு.க.ஸ்டாலினை குறிப்பிடும் போது ‘உழைப்பு… உழைப்பு… உழைப்பு…’ என்றார். அன்று கருணாநிதி ஒரு தீர்க்கதரிசியாகக் கூறினார். அதனை தனது உழைப்பின் மூலம் மெய்ப்பித்துக் கொண்டிருக்கிறார் முதல்வர் தனது உழைப்பின் மூலம்! இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

scroll to top