தென் ஆப்ரிக்காவில் கடந்த மாதம் உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இதுவரை கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ்களை விட இந்த ஒமிக்ரான் மிகவும் பயங்கரமானது எனவும் 50 முறை உருமாற்றம் கொண்டுள்ளது எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர் ஒமிக்ரான் கொரோனா பாதிப்பு உள்ள நாடுகளைச் சேர்ந்த மக்கள் தங்கள் நாடுகளுக்கு வருவதைத் தடுக்க, சில நாடுகள் பயணத் தடை விதித்துள்ளன. ஒமிக்ரான் பரவலை பயணத்தடைகள் மூலம் தடுக்க முடியாது எனவும் மாறாகத் தடைகளால் கடும் பாதிப்பு உண்டாகும் எனவும் உலக சுகாதாரம் அமைப்பு தெரிவித்துள்ளது
ஒமிக்ரான் பரவலை பயணத்தடைகள் மூலம் தடுக்க முடியாது : உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு
