THE KOVAI HERALD:
புதுத்துணி, பட்டாசு, பலகா ரம் தீபாவளி என்றால் இந்மூன்று முக்கியமான விஷயங்கள்தான் எப்பவும் உண்டு. இப்போதெல்லாம் நான்காவதாக அதிமுக்கிய விஷயம் சேர்ந்து கொண்டி ருக்கிறது. அதுதான் ஆம்னி பேருந்து.
முன்பெல்லாம் தீபாவளி கொண்டாடுபவர்கள் அவர வர் ஊர்களில் பெரும்பாலும் இருப்பார்கள். தீபாவளி கொண்டாடுவதற்கு முத லில் சொன்ன மூன்று விஷயங்களை சரிக்கட்டிக் கொண்டால் போதும், போனஸ் வந்து விடும் புதுத்துணி எடுத்து விடுவர். பட்டாசு கடைகளில் இரண்டு நாட்களுக்கு முன்பு வாங்கி னால் போதும், பலகாரம் ஒரு நாள் முன் னதாக வீட்டிலேயே தெரிந்த மாதிரி செய்து விடுவார்கள்.
இப்போதெல்லாம் புதுத் துணிக்கு பெரும்பாலும் டெய்லர் கடைக்குப் போவ தேயில்லை. சிறியவர் முதல் பெரியவர் வரை ரெடிமேட் சட்டை, பேண்ட்தான். எடுத்துத் தைக்கக் கொடுத் தால் ஒரு செட் துணி மூவா யிரம் ஆகும் என்றால் ரெடி மேட்டில் ரூ 500 முதல் ரூ. 1000-க்குள் எடுத்து விட முடிகிறது. அதேபோல் பலகாரம் என்பது வீட்டில் செய்வது யாரைக் கொண்டு ஆவது? அதுவும் இரண்டு பேர் வேலைக்குப் போன பின்பு ஓய்வு ஒழிச்சல் இல்லை. அதனால் கடையி லேயே வாங்கி விடுவது என்று காலம் மாறிவிட்டது. போதாக்குறைக்கு ஊர் தோறும் வீதிதோறும் பலகாரச்சீட்டு என்ற ஒரு வருடம் முழுக்க நடந் து அதிலிருந்து ஒரு தொகை யையும் பலகார த்தையும் கொடுக்கும் கும்பல்கள் அதிகமாகி விட்டது. அதன் பெயரால் கோடிக்கணக்கில் மோசடி கொள்ளை நடந்த தெல்லாம் ஒரு காலம். அதையும் ஓரளவு போலீஸ் கட்டுப்ப டுத்திவிட்டது.
முன்பெ ல்லாம் தீபாவளிக்கு ஒரு நாள் முன்பு வாங்கிய பட்டாசுகள் ஒரு வாரம் முன்பே சிவகாசியிலிருந்து நண்பர்கள் மூலம் வாங்கிக் கொள்வது அதிகம் நடக்கி றது. அல்லது நேரடியாக சிவகாசி யிலிருந்து பட்டாசு பாதி விலைக்கு வாங்கித் தருகிறேன் என்று குடிசைத் தொழிலாக செய்பவர்கள் பெருத்துவிட்டனர். அதில் மோசடி அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் நடக்கிறது. இந்த மூன்றிலும் இல்லாத மெகா மோசடி இப்போது நடப்பது நான்கா வதாக வரும் ஆம்னி பஸ் கொள்ளைதான். முன்பெல் லாம் அவரவர்க்கு அவரவர் ஊரிலேயே வேலை கிடைத்து பணி புரிந்து வந்தார்கள். இப்போது எல்லோருமே படிக்க ஆரம்பித்து விட்டார்கள். படிப்புக்கேற்ற வேலை தேட ஆரம்பித்து விட்டார்கள். இதனால் புற்றீசல் போல் வெளியூருக்கு வேலைக்குப் பறக்கும் மனிதப்பூச்சிகள் கோடிகளைத் தாண்டி விட்டது. குறிப்பாக கோயமுத்தூர், திருப்பூரில் சேலம், திண்டுக்கல், பழநி, ஒட்டன்சத்திரம், திருநெல்வேலி ஆட்கள் பணிபுரிகிறார்கள். கோவை யிருந்து சென்னை, ஐதரா பாத், பெங்களூரு என்று பணிக்கு சென்றவர்கள் மிகுதியாக உள்ளார்கள்.
இப்படி ஊர் ஊராகபோன மக்கள் எல்லாம் பண்டிகை க்கு ஊருக்கு வர பயன்படுத்தி யது பெரும்பாலும் ரயில் கள் தான். அடுத்தது அரசு விரைவுப் பேருந்துகள். இரண்டிலுமே கட்டணம் அரசு நிர்ணயித்ததுதான். பொங்கி வரும் பயணிகள் வெள்ளத்தைப் பார்த்து ஊர்தோறும் ஆம்னி பஸ்கள் பெருகின. அவையெல்லாம் டூரிஸ்ட் பர்மிட்டிலேயே இயங்குகின்றன. ஒரு எண்ணிலேயே இரண்டு பேருந்துகள், மூன்று பேருந்துகள் இயங்கி மோசடி செய்ஃஜ்மையாக டிக் கெட் விலையை ஏற்றி விடுகி ன்றன. இதனாலேயே விடுமுறை தினங்களில் ஊருக்குப் போக இளைஞர், இளைஞிகள் பயப்படுகின் றனர் ஊருக்கு வருவதை தீபாவளி, பொங்கல் என்றாக்கி விட்டனர். அப்பவும் விட்டனரா கட்ட ணக்கொள்ளையர்கள் என்றால் இல்லை. முன்பு கோவையிலிருந்து பெங்க ளூருக்கு ரூ. 500 டிக்கெட் ரேட் என்றால் இப்போது ஆயிரம் ரூபாய். அதுவே விடுமுறை தினமான சனி, ஞாயிறு கிழமைகளில் ரூ1500 முதல் ரூ. 2000 என எகிறி விட்டது. அதையும் தாண்டி இப்போது தீபாவளிக்கு ரூ. 4 ஆயிரம், ரூ. 5 ஆயிரம் என டிக்கெட் ரேட் ஏலம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு யார் இப்படி டிக்கெட் ரேட் கொள்ளையடி க்க அனுமதி கொடுக்கிறார் கள் என்பதுதான் கேள்வி. ஆம்னி பேருந்து வைத் திருப்பவர்கள் எல்லாம் எம்.எல்.ஏக்கள், எம்பிக்கள், மந்திரிகள், தொழிலதிபர் கள், கல்விமா ன்கள் இப்படியான அரசியல் செல்வாக்கு மிக்கவர்கள் தான் நாங்கள்தான் அரசாங் கம். நாங்கள் வைத்ததுதான் சட்டம் என்பவரகள்.
எனவேதான் இந்தக் கட்டணக் கொள்ளைக்கு கடிவாளம் போட முடியாது தவிக்கிறது போலீஸ். தவிர போலீஸ் அதிகாரிகளே இதில் இலஞ்சத்தில் கொழுத்துக் கண்டு கொள்ளாமல் விடுகிறார் கள். இந்த சூழலில்தான் தற்போது ஆம்னிக்கட்டணக் கொள்ளையில் பாதிக்கப் படுபவர்கள் உடனே போலீ ஸில்புகார் செய்ய லாம்.
அந்த ஆம்னி பேருந்து மீது நடவடி க்கை எடுப்பதோடு, தேவைப்பட்டால் சம்பந் தப்பட்டவர்களை கைதும் செய்வோம் என்று அறிவித்தி ருக்கிறது காவல்து றை. என்ன நடக்கிறது என்பதை அனுபவப்பூர்வமாக தீபாவளி கழிந்ததும்தான் பார்க்க வேண்டும்.
S KAMALA KANNAN Ph.no 9244317182