ஐ-போனுக்கான லைவ் காலர் ஐடியை அறிமுகப்படுத்துகிறது ட்ரூகாலர்

Press-release-Live-caller-ID-Global.jpg

உலகின் முன்னணி குளோபல் தகவல் தொடர்பு  தளமான  ட்ரூகாலர் (True Caller),  தனது தயாரிப்பின்  ஒரு முக்கியமான  புத்தாக்கத்தை ஐ- போன் (iPhone) இல் அறிமுகப்படுத்தப்படுவதாக  அறிவித்துள்ளது. உலகெங்கிலும் உள்ள ஐபோன் பயனர்களுக்கு மேம்படுத்தப்பட்ட மற்றும் பாதுகாப்பான தகவல் தொடர்பு அனுபவத்தை வழங்கும் புதிய உற்சாகமளிக்கும் அம்சங்களை இந்த புத்தாக்கங்கள் வழங்கும். முழுமையான லைவ் காலர் ஐடி அனுபவம் இப்போது முதல் முறையாக ஐ போனில் (iPhone)  அமைந்துள்ளது, இது எளிய சிரி (Siri )ஷார்ட் கட்டைப் பயன்படுத்தி யார் அழைக்கிறார்கள் என்பதை உங்களுக்குத் தெரிவிக்கிறது.

ட்ரூகலரின் (Truecaller) இந்திய நிர்வாக இயக்குநர் ரிஷித் ஜுன்ஜுன்வாலா அறிமுகப்படுத்தப்பட்ட புதிய புத்தாக்கங்களைப்  பற்றிப் பேசுகையில், ஒரு வலுவான  இணக்கமான ஏற்ப்பை ஐபோனில் நாங்கள் காண்கிறோம், மற்றும் இந்த தளத்தினுள் நூதனமானவற்றை தொடர்ந்து உருவாக்கி வருகிறோம்  இந்த சிரியின் (Siri) இயக்கத்தில் செயல்படும் லைவ் காலர்  ஐடி அனுபவத்தை உருவாக்க எங்கள் குழு ஆக்கச்சிந்தனையோடு கூடிய படைப்பாற்றலைப் பெருமளவில் பயன்படுத்தியது. இறுதியாக, அழைப்பு வரும்போது, எங்கள் சமூகத்தினர் ‘ஹே சிரி, ட்ரூ காலரில் தேடு’ என்று கூறுவதன் மூலம்  லைவ் காலர் ஐடி ஐ அனுபவத்தைப் பெறமுடியும். இந்த உலகளாவிய வெளியீட்டில் நாங்கள் மிகவும் உற்சாகமடைந்துள்ளோம்,  மேலும் iOS இயங்குதளத்தில் தொடர்ந்து புதுமைகளை உருவாக்குவோம்” என்று கூறினார்.

scroll to top