திருப்பரங்குன்றம் அருகே சிந்தாமணியில் ஸ்ரீ ஆனந்த ஐயப்பன் சேவா சங்கம் சார்பில் ,19 ம் ஆண்டு அஷ்டாபிஷேகம் நடைபெற்றது. சங்கொலி முழங்க 18 வாசனை திரவியங்கள் அபிஷேகம் நடைபெற்றது. 2 ஆயிரம் பேருக்கு அன்னதானம் நடைபெற்றது. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா, சிந்தாமணி சிவா இல்லத்தில் ஸ்ரீ ஆனந்த ஐயப்பன் சேவா சங்கம் சார்பில், 19ம் ஆண்டு மண்டல பூஜை விழா நடைபெற்றது. விழாவில், ஐயப்பனுக்கு பால்,தயிர், சந்தனம், இளநீர், விபூதி, பஞ்சாமிர்தம், மஞ்சள், திருமஞ்சனம் பன்னீர் உள்ளிட்ட 18 வகை வாசனை திரவியங்கள் அபிஷேகம் அலங்காரம் தூப தீபாரதனை செய்யப்பட்டது. பின்னர் 2, ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை, ஸ்ரீ ஆனந்த ஐயப்ப சேவா சங்கம் சார்பில் செய்யப்பட்டது