ஐபிஎல் போட்டிகளை காண எம்.எல்.ஏக்களுக்கு பாஸ் – முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி கோரிக்கையும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலும்

websites-scaled.jpg

​அதிமுக முன்னாள் அமைச்சர் சேர்ந்த எஸ்பி வேலுமணி, ஐபிஎல் போட்டிகளை காண எம்.எல்.ஏக்களுக்கு பாஸ் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.   சட்டப்பேரவையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை மீதான மானியக்கோரிக்கை விவாதத்தில் இன்று பேசிய அவர் “கடந்த அதிமுக ஆட்சியில் எம்.எல்.ஏக்களுக்கு ஐபிஎல் பாஸ் வழங்கப்பட்டது. ஐபிஎல் போட்டியை பார்க்க சட்டமன்ற உறுப்பினர்களுக்கு 300 பாஸ்கள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை அதிமுகவுக்கு பாஸ் கிடைக்கவில்லை. அதோடு தங்களுக்கு டிக்கெட் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். ” எனக் கோரிக்கை விடுத்தார்.

இதற்கு பதில் அளித்து பேசிய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “ஐபிஎல் போட்டியை நடத்துவது உங்களுடைய நெருங்கிய நண்பர் அமித்ஷாவின் மகன் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷாதான். நீங்கள் அவரிடம் சொல்லி அனைத்து எம்.எல்.ஏக்களுக்கும் 5 டிக்கெட் வாங்கிக்கொடுத்தால் போதும், காசு கொடுத்து வாங்கிக்கொள்கிறோம்” எனக் சுவாரசியமாக பதில் அளித்தார். .

scroll to top