ஐக்கிய அரபு அமீரகத்தில் வார விடுமுறை நாட்கள் சனி – ஞாயிறு ஆக மாற்றப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை வார இறுதி விடுமுறையாக உள்ளது. அதே சமயம்  மேற்கத்திய நாடுகளில் வார இறுதியாகச் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் உள்ளன. தற்போது அமீரகம் மேற்கத்திய நாடுகளுடனான ஒருங்கிணைந்த வளர்ச்சி, உலகளாவிய பங்குச் சந்தையில் கூடுதல் கவனம் ஆகியவற்றில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
ஆனால் வார இறுதி நாளாக வெள்ளிக்கிழமை உள்ளதால் அமீரகத்தில் மேலை நாடுகளுடனான வர்த்தகத்தில் சரிவரப் பங்கு  பெற இயலாத நிலை உள்ளது.எனவே இதையொட்டி அமீரகத்தில்  சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் வார விடுமுறை விடப்படும் என அமீரக அரசு அறிவித்துள்ளது.அதன்படி வரும் 2022 ஆம் வருடம் ஜனவரி 1 முதல் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை மதியம் வரை வேலை நாட்களாக இருக்கும்.   வெள்ளிக்கிழமை மதியம் 1.15 மணிக்கு ஜும்ஆ  தொழுகைக்கு பிறகு வார இறுதி தொடங்க உள்ளது.

scroll to top