ஜியோவின் வருகை காரணம் வாடிக்கையாளர் களை தக்க வைத்துக் கொள்ள பல்வேறு சலுகைகளை வழங்கியதன் விளைவாக கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்த ஏர்டெல் நிறுவனம் அதன் ப்ரிபெய்டு கட்டணங்களை 20 சதவீதம் அளவுக்கு உயர்த்தியுள்ளது. 79 ரூபாய் முதல் 498 ரூபாய் வரைஉள்ள அனைத்து திட்டங்களுக்கும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டண நடைமுறை நவம்பர் 26- ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. 59 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்த ஏர்டெல் நிறுவனம் மீண்டும் கட்டண உயர்வை அதிகரித்திருப்பது அதன் பங்குதாரர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏர்டெல் நிறுவனம் தனது ப்ரீபெய்டு சேவைக்கான கட்டணத்தை 20 முதல் 25 சதவீதம் வரை உயர்த்தியது வாடிக்கையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில் ஏர்டெலை தொடர்ந்து வோடபோன் நிறுவனமும் ப்ரீபெய்டு சேவைக்கான கட்டணத்தை 25 சதவீதம் உயர்த்த உள்ளது. இந்த கட்டண உயர்வானது வருகிற 25ம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. அதன்படி பேசிக் ப்ளானுக்கான கட்டணம் 79 ரூபாயிலிருந்து 99 ரூபாயாக ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் உச்சபட்ச டாப் அப் கட்டணத்திலும் 500 ரூபாய் உயர்த்தப்பட்டு, 2 ஆயிரத்து 899 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு மூலம், தொழில்துறையில் தற்போது நிலவும் நிதி நெருக்கடி நிலையை சமாளிக்க முடியும் என வோடபோன் ஐடியா தெரிவித்துள்ளது.