ஏடிஎம் சென்டர் போல் மதுபான விற்பனை அரசின் மதுபானக் கொள்கைதான் என்ன – கவலையில் மக்கள்

tasmac-automachit-machine.jpg

ஏடிஎம்மில் பணம் எடுப்பது போல் சென்னையில் உள்ள டாஸ்மாக் எலைட் கடை ஒன்றில் தானியங்கி மது விற்பனை இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேட்டில் புறநகர் பேருந்து நிலையம் அருகில் உள்ள வணிக வளாகத்தில் இயங்கி வருகிறது டாஸ்மாக் எலைட் கடை. இங்கேதான் இந்த மதுபான இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது.

மதுபிரியர்கள் தங்களுக்குத் தேவையான மதுவகையை தொடுதிரை மூலம் தேர்ந்தெடுத்த பின் பணம் செலுத்தும் வசதி உள்ளது. தாங்கள் தேர்ந்தெடுத்த மதுவகைக்கான பணம் செலுத்தியபின் இயந்திரத்தில் இருந்து வெளியில் வரும் அந்த மதுவகையை பெற்றுக் கொள்ளலாம். இதற்கான வரவேற்பை பொறுத்து மேலும் பல இடங்களில் இந்த இயந்திரம் வைக்கப்படும் என்று சொல்கிறார்கள் டாஸ்மாக் கடைக்காரர்கள்.

வெவ்வேறு அளவுகளில் வெவ்வேறு மதுவகைகள் ஒரு குறித்த அளவு மட்டுமே வைக்க முடியும் என்பதால் வாடிக்கையாளர் எதிர்பார்க்கும் அனைத்து விதமான மதுவகையும் அவர்களை குளிர்விக்கும் வகையில் கிடைக்குமா என்பது தெரியவில்லை. இதே நேரத்தில் இதை ஒட்டி சர்ச்சைகளும் எழாமல் இல்லை.

இந்த ஆண்டில் 500 மதுக்கடைகள் குறைப்பு என அறிவிக்கிறார் அமைச்சர். அதே வேகத்தில் மதுபானங்கள் திருமண மண்டபங்களில் விநியோகிக்க அனுமதி என்ற அறிவிப்பு வெளியாகிறது. அது பின்னர் கோரும் இடங்களில் மட்டும், பெரிய பெரிய விருந்துகளில் என்று விளக்கம் வருகிறது. இப்போது காசு போட்டால் மது எடுக்கலாம் என்ற நிலைக்கு கொண்டு வந்து விட்டார்கள். இந்த அரசின் மதுக் கொள்கை என்ன என்றே புரிந்து கொள்ள முடியவில்லை. இது எங்கே போய் முடியுமோ?’ என்று கவலையில் ஆழ்ந்திருக்கிறார்கள் சமூக நோக்கர்கள்.

scroll to top