எஸ்பி வேலுமணியுடன் கோவை அதிமுக கவுன்சிலர்கள் சந்திப்பு

கோவை மாநகராட்சிக்கு நடைபெற்ற தேர்தல் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டுள்ளன. அதில், கோவை மாநகராட்சியையும் திமுக பெரும்பான்மை பலத்துடன் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில், கோவை மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர்கள், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கட்சியின் பணபலம், ஆள்பலம், அதிகார பலம் உள்ளிட்டவற்றையும் மீறி, பொதுமக்களின் அமோக ஆதரவை பெற்று கோவை மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற திருமதி. ஷர்மிளா சந்திரசேகர், திரு. ஆர். பிரபாகரன், திரு. டி.ரமேஷ் ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்,” எனக் கூறினார்.

scroll to top